Wednesday, November 11, 2026

மத்தியக்கிழக்கு நாடுகளுக்கான தனது முதலாவது விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு: சவூதி,கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் இந்த விஜயத்தில் முக்கியமாக உள்ளடக்கம்

1 min read
file photo

அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியாவுக்கு செல்கிறார். 1 டிரில்லியன் டாலர்களை அமெரிக்க நிறுவனங்களில் முதலீடு செய்ய உள்ளதாக சவூதி அரேபிய அரசு தெரிவித்து இருந்த நிலையில் பயண அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் நடந்த நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திடும் விழாவில்,   டொனால்ட் ட்ரம்ப்  அடுத்த மாதம் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் சவூதி  அரேபியாவுக்குச் செல்லும் திட்டத்தை தெரிவித்தார்.

ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டபடி மே மாதத்தில் இந்தப் பயணம் நடக்குமா என்று கேட்டபோது, அது அடுத்த மாதம் நடக்கலாம், ஒருவேளை சிறிது தாமதமாகலாம் என்று ட்ரம்ப்  பதிலளித்தார்.

பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு போன்ற துறைகளில் வளைகுடா நட்பு நாடுகளுடன் அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதே இந்தப் பயணத்தின் நோக்கமாகும்.

சவூதி அரேபியா மற்றும் கத்தாரில் அமெரிக்காவின் முக்கிய இராணுவத் தளங்கள் உள்ளன, மேலும் பிராந்திய இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்காவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது.