முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்துவுக்கு பிணை!

Date:

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (10) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, சந்தேகநபரை ரூ.10 இலட்சம் கொண்ட இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2023 டிசம்பர் 31ஆம் திகதி வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலின் முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொலை செய்ய சதி செய்ததாக தேசபந்து தென்னகோன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ​மாத்தறை நீதிமன்றம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை கைது செய்ய பிடியாணை பிறப்பித்ததோடு வெளிநாட்டு பயணத் தடையையும் விதித்தது.

அதன் பின்னர், 2025 மார்ச் 20ஆம் திகதி தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து, தொடர்ச்சியாக இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். ​

சம்பவம் தொடர்பில் போகம்பறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், வழக்கு விசாரணையில் அவருக்கு பிணை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

 

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...