முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் உணர்வுபூர்வமாக செயற்படுகிறது: முஸ்லிம் சிவில் அமைப்புகளின் தலைவர்களுக்கும் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலில் அமைச்சர் விஜித ஹேரத்

Date:

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் உணர்வுபூர்வமாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் சிவில் அமைப்புகளின் தலைவர்களுக்கும் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இன்று (30இடம்பெற்றது.

முஸ்லிம் சமூகம் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளை புதிய அரசாங்கத்தின் கீழ் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதே இதன் நோக்கமாக அமைந்தது.

இந்த கலந்துரையாடலில் அமைச்சர் விஜித ஹேரத், பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லாம் ஆகியோர் கலந்துகொண்டதுடன், சுமார் 30 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்றனர்.

புதிய அரசாங்கத்தின் கொள்கை தேசிய ஒருமைப்பாடு எனவும், இனங்களுக்கிடையில் பேதங்களை ஏற்படுத்தவோ அல்லது எந்தவொரு தரப்பினரையும் இனவாத நடவடிக்கைகளில் ஈடுபடவோ அரசாங்கம் இடமளிக்காது எனவும் அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தினார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் இனம், மதம் அல்லது வேறுபாடுகளைப் பாராது சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் உணர்வுபூர்வமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், எந்தவொரு சமூகம் தொடர்பிலும் தீர்மானங்களை எடுக்கும்போது சம்பந்தப்பட்ட சமூகத்தின் கோரிக்கைகள் மற்றும் குரலுக்கு செவிசாய்ப்பது அரசாங்கத்தின் கொள்கை எனவும் தெரிவித்தார்.

பலஸ்தீன மக்கள் தொடர்பில் எதிர்க்கட்சியில் இருந்தபோது தாங்கள் மேற்கொண்ட செயற்பாடுகளில் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை எனவும், அரச அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் இராஜதந்திர ரீதியில் பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக தலையீடு செய்து வருவதாகவும் அமைச்சர் முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் தெரிவித்தார்.

முஸ்லிம் சிவில் அமைப்புகளின் தலைவர்களுடன் இவ்வாறான கலந்துரையாடல்களை எதிர்காலத்திலும் நடத்த இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...