மேல் மாகாணத்தில் சிக்கன்குன்யா நோய் பரவல் அதிகரிப்பு

Date:

மேல் மாகாணத்தில் சிக்கன்குன்யா நோய் பரவல் அதிகரித்து வருவதாக பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் தொற்றுநோயியல் பிரிவின் வைத்தியர் குமுது வீரகோன் தெவித்துள்ளதாவது,

சிக்குன்குன்யா வைரஸ் முதன்முதலில் 1956 ஆம் ஆண்டு தன்சானியாவில் கண்டறியப்பட்டது. இந்நோய் 1960 ஆம் ஆண்டு இலங்கைக்கும் பரவியது. உலகளாவிய ரீதியில் 115 நாடுகளுக்கு சிக்கன்குன்யா நோய் பரவியுள்ளது.

2 முதல் 3 நாட்கள் வரை நீடித்த காய்ச்சல், மூக்கு மற்றும் கைகளில் நிறமாற்றம், தோல் வெடிப்புகள், பல ஆண்டுகளாக நீடிக்கும் மூட்டு வலி மற்றும் அன்றாட நடவடிக்கைகளைச் செய்வதில் சிரமம் ஆகியவை இந்நோய்க்கான அறிகுறிகளாகும்.

நுளம்புகள் பெருகும் இடங்களை கட்டுப்படுத்துவதால் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் ஏற்படுவதை குறைத்துக் கொள்ள முடியும்.

நுளம்புகளில் 75 சதவீதமானவை வெளிப்புறங்களிலும், 53 சதவீதமானவை பாடசாலைகளிலும், 33 சதவீதமானவை பிராந்தியப் பகுதிகளிலும் உற்பத்தி  ஆகின்றன.

சிக்கன்குன்யா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால், ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...