ஊழியர் சேமலாப நிதிய சேவைகள் (EPF) இடைநிறுத்தம்

Date:

ஊழியர் சேமலாப நிதிய சேவைகள் (EPF) இன்று முதல் 23 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை தொழிலாளர் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

தொழிலாளர் திணைக்களத்தின் ஊடாக சேவை வழங்கப்படும் ஊழியர் சேமலாப நிதி கணினி தரவுத்தள அமைப்பில் அவசர பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஊழியர் சேமலாப நிதியத்தின் முழு நன்மைகள், இறந்த உறுப்பினர்களின் நன்மைகள், 30% நன்மைகளை செலுத்தல் மற்றும், புதிய நிறுவனங்களை பதிவு செய்தல் மற்றும் ‘B’ கார்டுகளை திருத்துதல் ஆகியவை நாடு முழுவதும் உள்ள தொழிலாளர் அலுவலகங்களில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும்.

மேலும், குறித்த சேவைகளைப் பெற 011 2201201 என்ற எண்ணை அழைத்து திகதியை முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தொழிலாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

22வது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் !

தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தால் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசியலமைப்பின்...

ஒரு அரசை உருவாக்குவதில் இலங்கையின் நிறைவேறாத பணி

–ரிசா யெஹியா சிரேஷ்ட கட்டிடக் கலைஞர். நாட்டிற்கு வெறும் நல்ல அரசாங்கம் மட்டும் தேவையில்லை....

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் !

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தில்...

விரைவில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை!

தற்போது வழங்கப்படும் அனைத்து தேசிய அடையாள அட்டைகளுக்கும் பதிலாக, அடுத்த சில...