கண்டியில் பல பகுதிகளுக்கு 36 மணி நேர நீர்வெட்டு…!

Date:

கண்டியில் பல பகுதிகளுக்கு 36 மணி நேரம் நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கண்டி மாநகர சபையின் மாநகர சபை ஆணையாளர் அறிவித்துள்ளார்.

அதன்படி, இன்று (28) பிற்பகல் 2.00 மணி முதல் 30ஆம் திகதி அதிகாலை 2.00 மணி வரை 36 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

பேராதனை வீதி, வில்லியம்கோபல்லாவ மாவத்தை, நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இருந்து நகர சபை சந்திப்பு வரை, அஸ்கிரிய, குள சுற்றுவட்டம், ரஜ பிஹில்ல மாவத்தை, பூவெலிகட, தென்னகும்புர, குருதெனிய, அம்பிட்டிய மற்றும் கண்டி நகர மையத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக கண்டி மாநகர சபையின் மாநகர சபை ஆணையாளர் தெரிவித்தார்.

கண்டி குட்ஷெட் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளின் போது நீர் விநியோக அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

சேதமடைந்த நீர் விநியோக அமைப்பை சரிசெய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளதால், சேமிக்கப்பட்ட நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கண்டி மாநகர சபை கோரியுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...