புதிய உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் ஜூன் 2 இல் தொடங்கும்!

Date:

புதிய உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் ஜூன் 2 ஆம் திகதி தொடங்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் வென்ற இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய விதம் குறித்து தேர்தல் ஆணைக்குழு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதற்கமைய, உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களின் விபரங்களை ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு கட்சிகளுக்கு அறிவித்துள்ளது.

மேலும், பெரும்பான்மை அதிகாரம் கொண்ட உள்ளூராட்சி சபைகளுக்கான மேயர்கள், நகரசபை தலைவர்களின் பெயர்களையும் சமர்ப்பிக்குமாறும் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பிறகு, பெரும்பான்மை அதிகாரங்களைப் பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான மேயர்கள், நகரசபை தலைவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...