நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

Date:

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Popular

More like this
Related

வியட்நாம் ஜனாதிபதி இலங்கை வருகை: பாராளுமன்றத்தில் விசேட உரை

வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின்...

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன அவரது வீட்டில் சடலமாக மீட்பு.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழை!

நாட்டின் தற்போதைய மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும்...

தரம் 6 பாடசாலை அனுமதி: இரண்டாம் சுற்று மேன்முறையீடுகள் நாளை முதல் ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026...