‘டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம்’ நூல் வெளியீட்டு விழா நாளை

Date:

சிரேஷ்ட ஊடகவியலாளரும் பன்னூலாசிரியருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய ‘டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம்’ என்ற நூல் வெளியீட்டு விழா நாளை 09ஆம் திகதி மாலை 04.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் ஜெஸ்மின் அரங்கில் நடைபெறவுள்ளது.

அப்றார் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் டாக்டர் ரயீஸ் முஸ்தபா தலைமையில் நடைபெறவுள்ள இந்நூல் வெளியீட்டு நிகழவில் பிரதம அதிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூஸூப் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும் சிரேஷ்ட சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்கள் கௌரவ அதிதியாகவும் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அல்ஹாஜ் அஸாத் சாலி அவர்களும் கலந்து கொள்வார்கள்.

நூல் பற்றிய கருத்துரையை ஆசிரியையும் இலங்கைத் திறந்த பல்கலைக்கழக வருகை தரு விரிவுரையாளருமான திருமதி சுமையா ஷரிப்தீன் வழங்கவுள்ளார்.

ஐ.நா.வுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான ஏ.எல்.ஏ. அஸீஸ் அவர்கள் ‘நூல் கடந்த நோக்கு’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார்.

ஏற்புரைகளை டாக்டர் ஷாபி சிஹாப்தீன் ,  நூலாசிரியர் அஷ்ரஃப் சிஹாப்தீன் ஆகியோர் நிகழ்த்துவார்கள். வரவேற்புரையை செல்வி ஸெய்னப் ஷாபி நிகழ்த்தவுள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...