இனியும் ஒரு முறை தாக்குதல் நடத்திவிட்டு ஓயமாட்டோம்; ஹவுதிக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்த இஸ்ரேல் பிரதமர்

Date:

இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள்  ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்கு   இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “இனி ஒரு முறை தாக்குதல் நடத்திவிட்டு ஓயமாட்டோம். தொடர் தாக்குதல் நடத்துவோம்…” என பதிலடி கொடுத்து காணொளியொன்றை  வெளியிட்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலின் 2ஆவது பெரிய நகரமான டெல்அவிவ் பென்குரியன் சர்வதேச விமான நிலையத்தின் அருகே ஹவுதி  படைகளால் ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை டெல் அவிவ் வெளியே உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் 3ஆவது முனையத்திற்கு அருகே 75 மீட்டர் தொலைவில் விழுந்தது.

இஸ்ரேல் நாட்டின் மிகவும் பாதுகாப்பான பகுதிகளில் ஒன்றான இங்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலால் அங்கு 25 மீட்டர் ஆழமான பள்ளமும் ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் சிலர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் கடும் கோபமடைந்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட காணொளி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“நாங்கள் கடந்த காலத்தில் அவர்களுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்டோம். எதிர்காலத்திலும் செயற்படுவோம். இனி ஒரு முறை தாக்குதல் நடத்திவிட்டு ஓயமாட்டோம். தொடர் தாக்குதல் நடத்துவோம். நாங்கள் இரண்டு பணிகளில் கவனம் செலுத்துகிறோம். ஒன்று ஹமாசை அழிப்பது, மற்றொன்று அவர்களிடம் இருந்து கைதிகளை பத்திரமாக மீட்பது. இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸவும் ஹவுதி தாக்குதலுக்கு நிச்சயம் பழிவாங்குவோம் என உறுதியளித்துள்ளார். ஈரானுடன் இணைந்த செயல்பட்டு வரும் ஹவுத்திகளுக்கு எதிராக வலுவான பதிலடி கொடுப்போம் என உறுதியளித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு யார் தீங்கு செய்தாலும் அதற்கு ஏழு மடங்கு பதிலடி தருவோம் என இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

நெதன்யாகு இவ்வாறு கூறியதற்கு பதிலளிக்கும் வகையில், “அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம்” என ஹவுதி அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...