கற்பனை செய்ய முடியாத சோகம்: இஸ்ரேலிய தாக்குதலில் காசா மருத்துவரின் ஒன்பது குழந்தைகள் உயிரிழந்த துயரம்

Date:

இன்று நடந்த இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதல், ஒரு குடும்பத்தின் வாழ்வை முழுமையாக புரட்டிப்போட்டது.

காசாவில் உள்ள ஒரு  பெண் மருத்துவரின் வீட்டின் மீது இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் அவரது 10 குழந்தைகளில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

தாக்குதலில் உயிர் பிழைத்த ஒரேயொரு மகனும் படுகாயமடைந்ததுடன்  அவரது கணவரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு சற்று முன்பு, கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவ வளாகத்தில் நஜ்ஜார் தனது கணவர் ஹம்தி அல்-நஜ்ஜருடன் வேலைக்குச் சென்றுள்ளார்.

சிறிது நேரத்திலேயே, தெற்கு கான் யூனிஸில் உள்ள கிசான் பகுதியில் உள்ள அவர்களின் வீட்டை இஸ்ரேலிய குண்டுவீச்சு தாக்கியது,  அவர்களின் 10 குழந்தைகளில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தம்பதியினரின் உயிர் பிழைத்த ஒரே குழந்தையான 11 வயது சிறுவன் கடுமையாக காயமடைந்து அவசர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காசாவின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சின் இயக்குநர் டாக்டர் முனீர் அல்போர்ஷ் கூறுகையில்,

காசாவில் உள்ள எங்கள் மருத்துவ ஊழியர்கள் தாங்கும் வலி இதுதான். வலியை விவரிப்பதில் வார்த்தைகள் போதாது, காசாவில், சுகாதாரப் பணியாளர்கள் மட்டும் குறிவைக்கப்படுவதில்லை, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மேலும் செல்கிறது, முழு குடும்பங்களையும் அழித்துவிடுகிறது-என்றார்.

இந்தத் தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பு கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலிய தாக்குதல் நடத்தப்பட்டதை ‘ஒரு கொடூரமான படுகொலை’ என்றும் இந்தக் கொடூரமான குற்றம் ஆக்கிரமிப்பின் கொடூரமான தன்மையையும்,  நெதன்யாகுவையும் அவரது கொலைகாரர்கள் மற்றும் மனித அரக்கர்களையும்  பழிவாங்கும் மனப்பான்மையின் அளவையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது’ என்று ஹமாஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...