விசா இன்றி சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த 30 இலங்கையர்கள் இன்று வியாழக்கிழமை (29) நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
30 இலங்கையர்களும் இன்று அதிகாலை 04.30 மணியளவில் குவைத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் விசா இன்றி சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்தக் குழு குவைத்திலிருந்து ஷார்ஜாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து G. 9-587 என்ற ஏர் அரேபியா விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
நாடு கடத்தப்பட்டவர்களை தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொண்டுள்ளது.