24 மணிநேர கடவுச்சீட்டு வழங்கும் சேவை நாளையுடன் நிறைவு

Date:

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஊடாக 24 மணி நேரமும் முன்னெடுக்கப்பட்டிருந்த ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை நாளையுடன் (30) நிறைவடையவுள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

கடவுச்சீட்டு விநியோகிக்கும் ஒருநாள் சேவை 24 மணி நேரமும் முன்னெடுக்கும் செயற்பாடு கடந்த 2025.02.18ஆம் திகதி முதல் இடம்பெற்றிருந்த நிலையில், நாளையுடன் (30) நிறைவுக்கு வரவுள்ளது.

அதற்கமைய, 2025 ஜூன் 02ஆம் திகதி திங்கட்கிழமை முதல் பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் ஒரே நாளில் கடவுச்சீட்டு வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்கள் காலை 7.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

அன்றைய தினம் ஒருநாள் சேவையின் கீழ் முன்கூட்டியே திகதியை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களும், அவசர அல்லது முன்னுரிமை தேவைகளைக் கொண்ட விண்ணப்பதாரர்களும் மேற்கண்ட காலகட்டத்தில் ஒருநாள் சேவையின் கீழ் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

தலைமை அலுவலகத்தில் சாதாரண சேவைகளின் கீழ் விண்ணப்பங்களும் காலை 7.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

பிராந்திய அலுவலகங்களில் காலை 7.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை சாதாரண மற்றும் ஒருநாள் சேவைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் வழமை போன்று இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...