இலங்கையைச் சேர்ந்த அஷ்ஷெய்க் அப்துல்லா முஹம்மத் அகீல் என்பவர் சவூதி அரேபியாவிலுள்ள மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் கலாநிதி பட்டத்தை முதல்தர சித்தியுடன் பூர்த்தி செய்துள்ளார்.
‘இலங்கையின் தேசிய பொருளாதாரத்தில் உல்லாசப் பயணத் துறையின் பங்கும் அதனை அபிவிருத்தி செய்தலும்’ – ஓர் ஆய்வு என்ற தலைப்பில் அவர் மேற்கொண்ட ஆய்வுக்கே இந்த கலாநிதி பட்டம் மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்டது.
கலாநிதி அஷ்ஷெய்க் அப்துல்லா முஹம்மத் ஆகில் அவர்கள் அக்குறணை அல் மீஸானிய்யா கலாசாலையில் கற்று வெளியேறிய குர்ஆனை முழுமையாக மனனம் செய்த ஒருவர்.
காலியில் அமைந்திருக்கின்ற இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் தன்னுடைய ஷரியா துறை ஆரம்ப நிலைய பூர்த்தி செய்த இவர் மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் 2009ஆம் ஆண்டு இணைந்து தன்னுடைய உயர் கல்வியைத் தொடர்ந்தார்.
அந்தவகையில் பொருளாதாரத்துறையில் மிகச்சிறப்பான முறையில் சித்தியடைந்து கலாநிதி பட்டத்தை பெற்ற அஷ்ஷெய்க் அப்துல்லா முஹம்மத் அகீல் அவர்களை Newsnow.lk வாழ்த்துகிறது