ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகனங்கள் இன்று ஏலத்தில்..!

Date:

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் இன்று (15) ஏலமிடப்படவுள்ளன.

விற்பனை செய்யப்படவிருக்கும் அனைத்து வாகனங்களும் பத்து வருடங்களுக்குள் உற்பத்தி செய்யப்பட்டவை என்பதுடன் அதற்கமைவான விலைக் கோரல் நேற்று (14) முடிவுற்றது.

இன்றைய தினம், பீ.எம்.டபிள்யூ.மோட்டார் வாகனம் 01, போர்ட் எவரெஸ்ட் ஜீப் 01, ஹுண்டாயி டெரகன் ஜீப் 01, லேண்ட் ரோவர் ஜீப் 01, மிட்சுபிஷி மொண்டெரோ ஜீப் 01, நிசான் பெற்றல் ஜீப் 03, நிசான் வகை மோட்டார் கார்கள் 02, போர்ஷ் (Porsche) கெயின் மோட்டார் வாகனம் 01, சென்யோன் ரெக்ஸ்டன் வகை ஜீப் 05, லேண்ட் குரூஷர் சஹரா வகை ஜீப் 01, வீ 08 வாகனங்கள் 06 மற்றும் மிட்சுபிஷி ரோசா வகை குளிரூட்டப்பட்ட பஸ் ஒன்றும் ஏலமிடப்படவுள்ளன.

ஜனாதிபதி அலுவலகத்தின் அதி சொகுசு வாகன ஏலத்தின் முதல் கட்டத்தின் கீழ் இதற்கு முன்னதாக 14 சொகுசு வாகனங்கள், பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 06 வாகனங்கள் மற்றும் உதிரிப் பாகங்களை விற்பனை செய்வதற்கு அமைவான ஏலம் நடத்தப்பட்டது.

அரசாங்கத்தின் செலவுக் குறைப்பு மற்றும் நிதிப் பொறுப்புக்கூறலை பலப்படுத்தும் நோக்கில் இந்த வாகனங்களை விற்பனை செய்ய தீர்மானித்திருப்பதோடு, முன்னைய ஏலத்தில் 09 டிபெண்டர்கள் உள்ளடங்களாக பல்வேறு வகையான 15 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தின் நிரந்தர பணிக்குழுவினருக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதோடு, முன்னாள் ஜனாதிபதியால் தனது பதவிக் காலத்தில் அரசியலமைப்பின் 41 (1) உறுப்புரைக்கு அமைவாக பணியமர்த்தப்பட்ட ஆலோசகர்கள் மற்றும் பணிக் குழாமிற்காக வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...