தமிழ்ப் பிரதேசங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம்..!

Date:

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் துஷானந்தன் தலைமையில் நேற்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.

கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மிஞ்சிய தமிழர்களின் உயிர்களை காப்பதற்காக உப்பில்லாத அரிசிகளை உபயோகித்து நீரை ஊற்றி அங்குள்ள கர்ப்பிணி தாய்மார்கள் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக தயாரிக்கப்பட்டவையே முள்ளிவாய்க்கால் கஞ்சியாகும்.

இறுதிக்கட்டப் போரின் போது உயிரிழந்தவர்களைச் சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலிருந்து ஊர்திப்பவனி நேற்று ஆரம்பமாகியுள்ளது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் இந்த ஊர்திப்பவனி ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது.

முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தை முன்னிட்டு வழமைபோல் இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலின் ஏற்பாட்டில் நேற்று காரைதீவு பொதுச் சந்தைக்கு முன்பாக இடம்பெற்றது.

இதன் போது இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.

முன்னதாக துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன .இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். இதேபோல் இவ் வாரம் பூராக மாவட்டத்தில் சகல பாகங்களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் காரைதீவில் அனுஷ்ட்டிக்கப்பட்ட பொலிஸாரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்..

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விஞ்ஞான...

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...

சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை எளிதாக்கும் PayPal இன்று முதல் இலங்கையிலும் அறிமுகம்

டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், PayPal பணப்பரிமாற்ற முறை இன்று (15)...