தேர்தல் சட்டங்களை மீறியதாக பிரதமருக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Date:

பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது கட்சியின் ஆதரவாளர்களை தேர்தல் பிரச்சார அமைதிக் காலத்திலும் பிரச்சாரம் செய்யச் சொன்னதன் மூலம் தேர்தல் சட்டங்களை மீறியதாக எழுந்த முறைப்பாட்டை விசாரிக்குமாறு  தேர்தல் கண்காணிப்பு அமைப்பான சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (PAFFREL) தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவுக்கு பஃப்ரல் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

“மே 3, 2025 முதல் அமைதியான காலத்திற்குப் பிறகும் கூட, பிரதமர் அமரசூரிய தனது ஆதரவாளர்களை பிரச்சாரத்தில் ஈடுபட ஊக்குவிப்பதாகக் கருதக்கூடிய ஒரு கருத்தை நாங்கள் கண்காணித்துள்ளோம்.

பிரதமரின் இந்தக் கருத்து, அவரது ஆதரவாளர்களை தேர்தல் சட்டத்தை மீற ஊக்குவிக்கும் செயலாகும், அதே நேரத்தில் அவர் சட்டத்தை புறக்கணித்துள்ளார்,” என்று PAFFREL நிர்வாக பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...