நேற்று இஸ்ரேல் சுதந்திர தினம்: இன்று பலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்ட தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு

Date:

இஸ்ரேல் உருவாக்கப்பட்டு 77 வருடங்கள் நிறைவு ஏப்ரல் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் இலங்கையில் நடந்த இஸ்ரேல் சுதந்திர தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.

இதற்கான நிகழ்வொன்று இலங்கை இஸ்ரேல் நட்புறவுச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

‘யௌம் ஹ ஆத்ஸ் மௌத்’ என அழைக்கப்படும் இந்த இஸ்ரேல் உருவாக்கப்பட்ட தினத்தை உலகெங்கும் உள்ள யூதர்களும் இஸ்ரேலை ஆதரிப்பவர்களும் அனுஷ்டிக்கின்றனர்.

சுதந்திரக் கொண்டாட்டங்களில் வழமையாக நடைபெறும் தீபமேற்றும் நிகழ்வு இஸ்ரேலைச் சூழ்ந்திருந்த காட்டுத் தீ காரணமாக நடைபெறவில்லை என்பதோடு விமான சாகசங்களும் நடைபெற்று வரும் யுத்தம் காரணமாக இம்முறையை சுதந்திர நிகழ்வில் இடம்பெறவில்லை.

பலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது அங்கிருந்து 750,000 க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்ட நக்பா தினம் இன்று இலங்கையில் அனுஷ்டிக்கப்படுகிறது.

இலங்கை பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் ஹெக்டர் கொப்பேகடுவ ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகவும் , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கௌரவ அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...