பாடசாலை மாணவியின் மரணம்: மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையடுத்து கல்வி அமைச்சு நடவடிக்கை

Date:

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற 16 வயதுடைய மாணவியின் மரணம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், பாடசாலை அதிபரை விளக்கம் கேட்டு வரவழைத்ததாகவும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் உடனடியாக பாடசாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு எதிராக ஒன்று திரண்ட பொதுமக்கள் உயிரிழந்த மாணவிக்கு நீதிகோரி குறித்த பாடசாலையை முற்றுகையிட்டு இன்று (8) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மேல் மாகாண கல்வி அமைச்சின் அதிகாரியொருவர், குறித்து சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்திருந்தார்.

அதன்படி கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை அதிபரிடம் விளக்கம் கோரப்படும் என்றும், சந்தேக நபரான ஆசிரியர் உடனடியாக  பணி இடமாற்றம் செய்யப்படுவார் என்றும், மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணை அறிக்கை கிடைத்தபின் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...