ஹெலிகொப்டர் விபத்து: 6 பேர் உயிரிழப்பு; 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு நியமனம்

Date:

சிறப்புப் படையினரின் வழக்கமான பயிற்சி பணிகளின் போது, இன்று காலை (09) மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் பெல் 212 ஹெலிகொப்டர் மோதியதில் ஆறு வீரர்கள் உயிரிழந்ததாக இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பான விமானப்படையின் அறிக்கையில்,

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹிங்குராக்கொட தளத்தில் அமைந்துள்ள இலங்கை விமானப்படையின் 07 ஆம் இலக்க படைப்பிரிவைச் சேர்ந்த பெல்-212 ரக ஹெலிகாப்டர், இராணுவ விசேட படையணியினரின் பயிற்சி நிறைவு அணிவகுப்புக்கான செயல் விளக்கப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட அவசர சூழ்நிலை காரணமாக இன்று (மே 09, 2025) காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விபத்துக்குள்ளானது .

காலை 6.46 மணிக்கு ஹிங்குராக்கொட விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர், மாதுரு ஓயா இராணுவ விசேட படைதளத்தில் இருந்து விசேட படைப்பிரிவின் பயிற்சி நிறைவு அணிவகுப்பில் ஒரு விளக்கப் பயிற்சியை காண்பிக்க ஆறு விசேட படை வீரர்களுடன் பயணம் செய்த சொற்ப வேளையில் இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்து நடந்த நேரத்தில், இரண்டு விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் உட்பட 12 பேர் விமானத்தில் பயணித்திருந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆரம்ப சிகிச்சைக்காக அரலகங்வில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஹெலிகாப்டரில் இருந்த விமானப்படையை சேர்ந்து இரண்டு (Air Gunners) வான்வழி துப்பாக்கி வீரர்கள் மற்றும் நான்கு இராணுவ விசேட படை வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த விமான விபத்து குறித்து மேலும் விசாரணை நடத்த விமானப்படைத் தளபதி 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை நியமித்துள்ளார்.

Popular

More like this
Related

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி...

சேதமடைந்த உபகரணங்களுக்காக ரூமேஷ் தரங்கவுக்கு துருக்கிய ஏர்லைன்ஸ் இழப்பீடு!

நாடு திரும்பும் வழியில் தனது விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்காக, இலங்கை...

இஸ்லாத்தை விமர்சித்த வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஞானசார தேரர் ஆஜர்!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டதாகத் தாக்கல் செய்யப்பட்ட...

2025/2026 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியின் இறுதிச் செலுத்தலுக்கான காலக்கெடு...