லெபனானில் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த பொறியியலாளர் காலித் அஹ்மத் அல்-அஹ்மத் இன்று காலை தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு சென்று கொண்டிருந்தபோது, வடக்கு லெபனானில் உள்ள சிடோனில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தார்.
இவரது மரணம் தொடர்பில் ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
‘நமது வீரத் தியாகிக்காக இரங்கல் தெரிவிக்கும் வேளையில், எல்லாம் வல்ல இறைவனிடமும், பின்னர் நமது மக்களிடமும், நமது தேசத்திடமும்,எதிர்ப்பின் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என்று உறுதியளிக்கிறோம். தியாகிகளின் இரத்தம் விடுதலைக்கான பாதையை ஒளிரச் செய்யும் ஒரு கலங்கரை விளக்கமாகவே இருக்கும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 19 மாதங்களாக பலஸ்தீனிய குழுக்களுக்கு எதிராக லெபனானில் உள்ள ஹமாஸ் உறுப்பினர்களை இஸ்ரேலின் இராணுவம் அடிக்கடி குறிவைத்து வருகிறது.
இதனிடையே, அக்டோபர் 7, 2023-இல் தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் பின்னணியில், ஹமாஸ் லெபனானில் இருந்தும் ராக்கெட் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.