4 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை

Date:

4 மாவட்டங்களில் உள்ள 08 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நிலச்சரிவு  எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இன்று (28) காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (29) காலை 10.00 மணி வரை 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, கண்டி மாவட்டத்தில் கங்கஇஹலகோரல மற்றும் பஸ்பாகேகோரல ஆகிய பகுதிகளுக்கு 01 ஆம் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க, புலத்கோஹுபிட்டிய, யட்டியந்தோட்டை மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...