தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17வது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா: (படங்கள்)

Date:

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா  03, 04ஆம் திகதிகளில்  பல்கலைக்கழகத்தின் பிரதான அரங்கில் நடைபெற்றது.

ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபாவின் முன்னிலையில் பதில் உபவேந்தர் யூ.எல்.மஜீத் தலைமையில் சனி, ஞாயிறு இரு தினங்களாக நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் ஆறு அமர்வுகளில் 2077 மாணவர்கள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

முதலாம் நாள் முதல் அமர்வில் இலங்கை உயர் நீதிமன்ற நீதிபதி  யசந்த கொடகொட  பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இரண்டாம் அமர்வில் களனி பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறை பேராசிரியர் கலாநிதி சீதா.பி. பண்டாரவும் மூன்றாவது அமர்வில் இலங்கைக்கான சவூதி அரேபிய நாட்டின் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி கலந்து கொண்டு உரையாற்றினர்.

முதல் நாளில் பிரயோக விஞ்ஞான பீடத்தில் 172 மாணவர்களும் பொறியியல் பீடத்தில் இருந்து  82 மாணவர்களும் தொழினுட்பவியல் பீடத்திலிருந்து 102 மாணவர்களும் கலை கலாச்சார பீடத்தில் இருந்து 314 மாணவர்களும் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்திலிருந்து 342 மாணவர்களும் பட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...