சவூதி பட்டத்து இளவரசருடன் ட்ரம்ப் சந்திப்பு: இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து முக்கிய பேச்சு

Date:

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் 4 நாட்கள் அரசு முறை பயணமாக ட்ரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார்.

ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய கிழக்கு பயணம் இதுவாகும்.

பயணத்தின் முதல் நாடாக சவூதி அரேபியா சென்றுள்ளார். தனி விமானம் மூலம் ரியாத் வந்த டிரம்பை சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார்.

அதன்பின் டொனால்ட் ட்ரம்பும், முகமது பின் சல்மானும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

வர்த்தகம், இருநாட்டு உறவு, இஸ்ரேல்-ஹமாஸ் போர், ஈரான் விவகாரம், கச்சா எண்ணெய் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

சவூதி பயணத்தை நிறைவு செய்தப்பின் ட்ரம்ப் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளார். ட்ரம்பின் மத்திய கிழக்கு பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...