பாஸ்போர்ட், வருமான வரிப் பத்திரம் விநியோகங்கள் இல்லை!

Date:

உள்ளூராட்சித் தேர்தல் காரணமாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 05, 06, 07 ஆம் திகதிகளில் நிறுத்தப்படும் என பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த திகதிகளில் ஏனைய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வருகிற வாகன வருமான வரிப் பத்திரம் வழங்கும் கருமபீட சேவை செயற்பாடுகள் இம்மாதம் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெறமாட்டாதென்றும்  அதன் பின்னர் 7 ஆம் திகதி இச்சேவை வழமை போன்று இடம்பெறுமெனகிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள மாகாண ஆணையாளர் திருமதி த.வருணி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...