பெரும்பான்மையை பெற்ற கட்சிகளுக்கு ஆட்சியை அமைக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு

Date:

உள்ளூராட்சி நிறுவனங்களில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தலைவர்களை நியமிப்பது தொடர்பாக அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி சபை தேர்தலில், 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று உள்ளூராட்சி மன்றங்களை வென்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் செயலாளர்களுக்கு, இது தொடர்பான அறிவிப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதேச மட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி உறுப்பினர்களின் பெயர்கள் அடுத்த சில நாட்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நியமிக்கப்படவுள்ள பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறித்து, எதிர்வரும் நாட்களில் சம்பந்தப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...