பிரபல நடிகை மாலினி பொன்சேகா காலமானார்

Date:

சிங்கள திரையுலகின் பிரபல நடிகையான மாலினி பொன்சேகா இன்று சனிக்கிழமை (24) அதிகாலை காலமானார்.

மாலினி பொன்சேகா உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

மாலினி பொன்சேகா உயிரிழக்கும் போது அவருக்கு 76 வயதாகும்.

கடந்த 1968 ஆம் ஆண்டு  ‘புஞ்சி பபா’ என்ற திரைப்படத்துடன் இலங்கைத் திரைப்படத்துறையில் தனது வாழ்க்கையை நடிகை மாலினி பொன்சேகா தொடங்கினார்.1978 ஆம் ஆண்டு பைலட் பிரேம்நாத் தமிழ்த் திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து கதாநாயகியாக நடித்தார்.

அத்துடன், யார் அவள் (1976), மல்லிகை மோகினி (1979), பனி மலர் (1981) ஆகிய தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு மாலினி பொன்சேகா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக  நியமிக்கப்பட்டார்.

சுமார் 70 வருடங்களுக்கு மேலாக நாட்டின் கலை மற்றும் சினிமாவில் மிகவும் மதிக்கப்படும், செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக காணப்பட்ட மாலினி பொன்சேகா, “இலங்கை சினிமாவின் ராணி” என அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...