இலங்கையின் முதலாவது ஹஜ் குழு இன்று பயணம்!

Date:

2025 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்காக உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் புனித மக்கா நகருக்கு வருகைத்தந்து கொண்டிருக்கின்றார்கள்.

அதற்கமைய மொத்தம் 3,500 பேர்கொண்ட ஹஜ் ஹாஜிகளில் இன்று 46 பேர் கொண்ட முதலாவது குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக தம்முடைய பயணத்தை ஆரம்பித்தார்கள்.

முதலாவது ஹஜ் குழு பயணமாவதை முன்னிட்டு விமான நிலையத்தில் இவர்களை வழியனுப்புதற்காக இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், இலங்கைக்கான இலங்கைக்கான சவூதி தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி, விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் வை.எல்.மொஹமட் நவவி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் என். நிலூஃபர், ஹஜ் மற்றும் உம்ரா கமிட்டியின் உறுப்பினர் பேராசிரியர் எம்.எஸ்.எம். அஸ்லம் உட்பட பல்வேறு உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டு ஹஜ் குழுவினரை வழியனுப்பி வைத்தனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கைக்கான சவூதி அரேபியாவின் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி  அவர்கள் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில்,

அனைத்து உலக முஸ்லிம்களாலும் போற்றி விரும்பப்படுகின்ற இஸ்லாத்தின் ஐந்தாவது முக்கிய கடமையான புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவை நோக்கி பயணிக்கின்ற முதல் குழுவை வழியனுப்பும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முக்கிய நிகழ்வில், உங்களுடன் இணைந்து கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இரு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் சவூதி அரேபிய அரசாங்கம், ஹஜ்ஜுக்காக வரும் அல்லாஹ்வின் விருந்தினர்களுக்குப் பணியாற்றுவதில் முழுமொத்த பங்களிப்பையும் தவறவிடாமல் செயல்பட்டு வருகிறது. ஹஜ் யாத்திரிகர்கள் சவூதிக்குள் வந்ததிலிருந்து தத்தமது நாட்டுக்கு திரும்பும் வரை அனுபவிக்கும் நலன், பாதுகாப்பு மற்றும் வசதிகளை உருதிப்படுத்துவதற்கு நாட்டின் அனைத்து வளங்களையும் சவூதி அரசாங்கம் பயன்படுத்துகிறது.

இந்த ஆண்டு ஹஜ் பருவத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சவூதி அரேபிய இராச்சியத்துடன் தொடர்புடைய நிறுவனங்களால் முழுமையாக பூரணப்படுத்தப்பட்டுள்ளன. யாத்திரிகர்கள் பாதுகாப்பாக, அமைதியான முறையிலும் ஆன்மிக ரீதியாக நிறைவுபெறும் வகையிலும் ஹஜ் கடமையை நிறைவேற்றக்கூடிய சூழலை உருவாக்குவதற்காக, சுகாதாரம், ஒழுங்கமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு சேவைகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

புனித ஹஜ் பயண ஏற்பாடுகள் மற்றும் ஒழுங்கமைப்புகள் சிறப்பாக நடைபெறுவதற்காக, சவூதி அரேபிய இராச்சியம் மற்றும் இலங்கையின் அதிகாரிகள் வழங்கிய பயனுள்ள ஒத்துழைப்புக்கு இதயம் கனிந்த பாராட்டுகளையும் தெரிவிகரகிறோம். இந்த ஒத்துழைப்பு, எமது இரு நாடுகளுக்கு இடையிலான உறுதியான மற்றும் நட்பான உறவுகளை பிரதிபலிப்பதாக அமைகிறது.

எனவே இறுதியாக ஹஜ்ஜுக்காக செல்கின்ற அனைத்து யாத்ரிகர்களுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் அனைவரது ஹஜ்ஜையும் அல்லாஹ் ஏற்றுக்கொண்டு, எல்லோரது பாவங்களையும் மன்னித்து, பத்திரமாக திரும்பிவர அல்லாஹ் அருள்புரியட்டும் என்றும் நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன். அல்லாஹ் எமது நாடுகளை அமைதியாலும் வளமையாலும் தொடர்ந்தும் அருள்புரியட்டும்  எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...