வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 8,000க்கும் மேற்பட்ட தானசாலைகள் பதிவு!

Date:

இந்த ஆண்டு வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 8,000க்கும் மேற்பட்ட தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை பதிவு செய்யப்பட்ட தானசாலைகளின் எண்ணிக்கை 8,581 ஆகா காணப்படுவதாக அதன் செயலாளர் சமில் முத்துக்குட தெரிவித்துள்ளார்.

குறித்த தன்சல்கள் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், விசாக பூரணை தினத்திலும் மறுதினமும் அவை சோதனை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த ஆண்டு விசாக பூரணை காலப்பகுதியில் உணவு மற்றும் நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரித்ததால், இந்த ஆண்டு தானசாலைகளை சுகாதார முறையில் நடத்துமாறு சுகாதாரத் துறையை சார்ந்தவர்களால் கோரப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கை – பெலாரஸ் இடையே சுகாதாரத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கை மற்றும் பெலாரஸ் குடியரசுக்கு இடையே சுகாதார சேவை தொடர்பான புரிந்துணர்வு...

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விஞ்ஞான...

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...