நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரால் பாதிக்கப்பட்டவர்களிடம் தகவல் திரட்டும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு!

Date:

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மேற்பார்வையின் கீழ் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்ட பின்னர் இழப்பு ஏற்பட்ட நபர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

குறித்த வைத்தியர் சமீபத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் பல குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார்.

அவற்றில் வெளிப்புற நிறுவனங்களிலிருந்து அறுவை சிகிச்சை உபகரணங்களைப் பெற்று நோயாளிகளுக்கு இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டும்  உள்ளடங்கும்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட சுமார் 77 நபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனூடாக பாதிக்கப்பட்ட நபர்கள் அல்லது இந்த முறைகேடு தொடர்பில் அறிந்தவர்கள் ஆணைக்குழுவின் அவசர தொலைபேசி இலக்கமான 1954 அல்லது ciaboc_gen@ciaboc.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி மூலம்  தகவல்களை வழங்கலாம் என்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...