இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான திருத்தப்பட்ட சுற்றறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும்

Date:

இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான திருத்தப்பட்ட சுற்றறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தற்போதுள்ள சுற்றறிக்கையில் உள்ள பல குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக புதிய சுற்றறிக்கை வெளியிடப்படும் என்றும்  பொருத்தமான மாணவர்கள் பாடசாலைகளில் சேர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளை இந்த சுற்றறிக்கை செய்யும் என்றும் பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான மற்றும் முறையற்ற முறைகள் மூலம் பாடசாலைகளில் மாணவர்களை சேர்க்கும் நடைமுறைக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும்.

அத்துடன், முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான திருத்தப்பட்ட சுற்றறிக்கை அடுத்த வாரம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும்.

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்...

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...