ஈரானிய தூதுவருடன் அமைச்சர் விஜித ஹேரத் சந்திப்பு: இஸ்ரேல்–ஈரான் போர் நிலவரம் குறித்து கவனம்

Date:

இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித் ஹேரத் தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கு தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளின் முக்கியத்துவத்தை அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

எந்தவொரு தீவிரப் போராட்டமும் இலங்கை உட்பட பிராந்தியத்திற்கும் அதற்கு அப்பாலும் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அவர் மேலும் கூறினார்.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஈரானில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தூதருக்கு விளக்கியதாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...