உடுதும்பர பிரதேச சபையிலும் அதிகாரத்தை கைப்பற்றிய ஐக்கிய மக்கள் சக்தி

Date:

கண்டி மாவட்டத்தில் உடுதும்பர பிரதேச சபையின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி கைப்பற்றியுள்ளது.

வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற உடுதும்பர பிரதேச சபையின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் அஜித் விபுல பண்டார சுபசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் உடுதும்பர பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளிலிருந்தும் தலா 6 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே நேற்று பிரதேச சபைத் தலைவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

இதேவேளை கண்டி மாவட்டத்தில் அக்குரணை பிரதேச சபை மற்றும் கடுகண்ணாவை நகர சபை என்பவற்றிலும் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...