ஒமிக்ரோன் வைரஸ் பரவல்: துறைமுகங்கள், விமான நிலையங்களில் PCR பரிசோதனைகள் முன்னெடுக்க வலியுறுத்தல்

Date:

இலங்கையில் புதிதாக ஒமிக்ரோன் துணை வகைகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் கொவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு எதுவும் இல்லை என்ற போதிலும், அரசாங்கம் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கின்றது. விமானநிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் புதிதாக ஒமிக்ரோன் துணை வகைகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

புதிய மாறுபாடுகள் தோன்றுவது வைரஸ் பரிணாம வளர்ச்சியின் ஒரு வழக்கமான பகுதியாகும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

காலத்திற்கு காலம் இந்த புதிய மாறுபாடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன,இதனை எதிர்கொள்வதற்கு எங்களின் அமைப்பு முறைகள் தயாராக உள்ளன என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

Popular

More like this
Related

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...