ஓட்டமாவடி பிரதேச சபை SLMC வசமானது; தவிசாளராக SJB பைறூஸ் தெரிவு

Date:

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு திங்கட்கிழமை (16) இடம்பெற்றது.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இவ் அமர்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சபையை கைப்பற்றியுள்ளது.

இதில், ஓட்டமாவடி -2 ஆம் வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எச்.எம்.பைறூஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆதரவளித்து தவிசாராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், பிரதி தவிசாளராக மாஞ்சோலை – பதுரியா நகர் வட்டாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏ.எச்.நுபைர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி 8 ஆசனங்கள் ஆதரவுடன் காணப்படுவதுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 9 ஆசனங்கள் ஆதரவுடன் பிரதேச சபை ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...