‘ஹிஜ்ரி வருடத்திற்கான ஆளுமை’ விருது: சவூதி அரேபியாவின் ஹஜ் சேவைகளை பாராட்டி, மலேசிய மன்னர் கௌரவிப்பு

Date:

ஹஜ்ஜாஜிகளுக்காக சவூதி அரேபியா அரசு மேற்கொள்ளும் சிறப்பான பணிகள் மற்றும் நவீன முயற்சிகளை மதிப்பளிக்கும் வகையில், மலேசிய மன்னர் இப்ராஹிம் பின் இஸ்கந்தர், சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா விவகார அமைச்சர் டாக்டர் தௌஃபீக் அல்-ரபியாவுக்கு ‘ஹிஜ்ரி வருடத்திற்கான ஆளுமை’ என்ற உயரிய விருதை வழங்கி கௌரவித்தார்.

இந்த விருது, ஹிஜ்ரி புத்தாண்டை முன்னிட்டு கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு அதிகாரப்பூர்வ விழாவில் வழங்கப்பட்டது. “ஒரு குடிமை தேசத்தை உருவாக்குதல்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த விழா, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் மத விவகார அமைச்சர் டாக்டர் முகமது நயீம் பின் ஹாஜி மொக்தார் ஆகியோரின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விருது இஸ்லாமிய விழுமியங்களைப் பேணுவதிலும், முஸ்லிம் உலகத்திற்கான சேவைகளிலும் அவர்கள் ஆற்றிய சேவைகள் பாராட்டப்படுகின்றன.

ஹஜ் மற்றும் உம்ரா சேவைகளை நவீனமயமாக்குவதில், உலகெங்கும் உள்ள யாத்ரீகர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதிலும் சவூதி அரசின் செயல்பாடுகளுக்கு வழிகாட்டியுள்ள டாக்டர் அல்-ரபியாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...