பொசன் தினத்தை முன்னிட்டு 3,500 பொலிஸ் அதிகாரிகள் கடமையில்

Date:

அரச பொசன் நிகழ்வை முன்னிட்டு அநுராதபுரத்தை அண்மித்த பகுதிகளில் 3,500 பொலிஸ் அதிகாரிகளை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கடமைகள் மற்றும் குற்றங்களை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாவி மற்றும் நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் விசேட உயிர் பாதுகாப்பு அதிகாரிகளை கொண்ட குழுக்கள் சிலவற்றை ஈடுபடுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

அநுராதபுரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளை சுத்தப்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கழிவுப்பொருட்களை அகற்றுவதற்காக 500 இற்கும் மேற்பட்ட குப்பைத் தொட்டிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...