நிதி அமைச்சின் புதிய செயலாளராக ஹர்ஷன சூரியப்பெரும நியமனம்

Date:

நிதி அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

நிதி அமைச்சின் செயலாளராக இருந்த மஹிந்த சிறிவர்தன குறித்த பதவியை சமீபத்தில் இராஜினாமா செய்ததோடு, ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) மாற்று நிர்வாக இயக்குனராக பதவியேற்கவுள்ளார்.

 

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான ஹர்ஷன சூரியப்பெரும, தற்போதைய அரசாங்கத்தில் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராகப் பணியாற்றியதோடு, மஹிந்த சிறிவர்தன ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வெற்றிடமாகியுள்ள நிதி அமைச்சின் செயலாளர் பதவியை பொறுப்பேற்பதற்காக கடந்த வாரம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

 

Popular

More like this
Related

நூல் வெளியீட்டு விழா ஒத்திவைப்பு

பஹன பப்ளிகேஷனின் 5வது வெளியீடாக வரும் “முஸ்லிம்களின் தேசத்துக்கான பங்களிப்புக்கள்” (අභිමානවත්...

வட மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை.

இன்றையதினம் (02) நாட்டின் வட மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள்...

பொதுமக்களைப் பீதியடையச் செய்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அனர்த்தம் ஏற்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் உண்மைக்கு புறம்பான...

புத்தளத்தில் நிவாரணப் பணிக்கான மையமொன்றினை நிறுவ ஏன் தாமதம்?

நாட்டின் பல பகுதிகளில் சமீபத்திய புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...