இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மேற்பார்வையின் கீழ் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்ட பின்னர் இழப்பு ஏற்பட்ட நபர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
குறித்த வைத்தியர் சமீபத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் பல குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட சுமார் 77 நபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனூடாக பாதிக்கப்பட்ட நபர்கள் அல்லது இந்த முறைகேடு தொடர்பில் அறிந்தவர்கள் ஆணைக்குழுவின் அவசர தொலைபேசி இலக்கமான 1954 அல்லது ciaboc_gen@ciaboc.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தகவல்களை வழங்கலாம் என்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.