இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் உலகளவில் பயண இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதால், வெளிநாடுகளுக்குச் செல்லும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வொஷிங்டன் அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்க குடிமக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளைக் காரணம் காட்டி, உலகம் முழுவதும் பயணம் செய்பவர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு எச்சரிக்கையை வெளியிட்டது.
அதில், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் மத்திய கிழக்கு முழுவதும் பயணங்களுக்கு இடையூறு விளைவித்துள்ளது மற்றும் அவ்வப்போது வான்வெளியை மூடியுள்ளது.
அமெரிக்க குடிமக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உலகெங்கிலும் உள்ள அமெரிக்க குடிமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த வாரம், ஆயுத மோதல்கள், பயங்கரவாதம் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை காரணமாக இஸ்ரேல், காசா மற்றும் மேற்குக் கரை போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கப் பயணிகளை வெளியுறவுத்துறை எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.