ஈரானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்!

Date:

மத்திய கிழக்கில் நிலவும் போர் மோதல்கள் காரணமாக, ஈரானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதில், ஈரானில் 41 இலங்கையர்கள் இருந்ததாகவும்  அவர்களில் நான்கு பேர் இதுவரை நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போது ஈரானில் 37 இலங்கையர்கள் இருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஈரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பணிபுரியும் ஐந்து அதிகாரிகளும் இந்த எண்ணிக்கையில் அடங்குவதாகவும் அமைச்சு கூறியுள்ளது.

 

இதற்கிடையில், ஈரானில் தங்கியிருக்கும் இலங்கையர்களில் நான்கு பேர் நாளையதினம் (23) துருக்கி எல்லை வழியாக வெளியேற உள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், ஈரானில் சுமார் 35 இலங்கையர்கள் தங்கியிருப்பதாக தெரிவித்திருந்தார்.

அவர்களில் எட்டு பேர் ஈரான் பிரஜைகளுடன் திருமணமாகி வாழ்ந்து வருவதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிகாட்டினார்.

Popular

More like this
Related

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...

பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் போலி அழைப்புகள்!

தனிநபர் விபரங்களைப் பெற்று நிதி மோசடி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட சில...