ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் குறித்து ஐ.நா கவலை

Date:

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் அவை கவலை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஈரான் போரில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் அன்டானியோ குட்டரெஸ் கவலை தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் குறித்து அன்டானியா கூறுகையில்,

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பது கவலையளிக்கிறது. ஏற்கெனவே போரில் ஈடுபட்டிருப்பவர்களின் மீதான தாக்குதல், ஆபத்தான நடவடிக்கையே.

இது, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு நேரடியாக அச்சுறுத்தலை விளைவிக்கும். அமெரிக்காவின் தாக்குதல், உலகளவிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும்.

இந்தத் தாக்குதல், மக்களுக்கும் உலகுக்கும் பேரழிவை ஏற்படுவதாக அமையும். ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டவிதிகளின்கீழ், போர்ப் பதற்றத்தைத் தணிக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும்.

டொனால்ட் டிரம்ப் இந்த ஆபத்தான நேரத்தில், மேலும் குழப்பம் ஏற்படும் சூழல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம்.

இராணுவ நடவடிக்கையானது, ஒருபோதும் தீர்வாக அமையாது. அமைதி, பேச்சுவார்த்தை மட்டுமே முன்னோக்கிக் கொண்டு செல்லும் என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்கா, பயங்கரவாதிகளுக்கு ஈரான் ஆதரவு அளிப்பதாகக் கூறி, ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது.

இதனையடுத்து, அமெரிக்கா தொடங்கிய போரை, தாங்கள் முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் ஈரானும், அமெரிக்காவின் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தவிருப்பதாக ஹவுதி அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

Popular

More like this
Related

டிரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதற்கு வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பு!

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள வெனிசுவேலாவில் மக்களின் ஜனநாயக உரிமைகளை...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...