51ஆவது G7 உச்சி மாநாடு கனடாவின் ஆல்பர்ட்டாவில் ஆரம்பம்

Date:

உலகின் மிக சக்திவாய்ந்த தலைவர்களை ஒன்றிணைக்கும் 51 ஆவது வருடாந்த G7 உச்சி மாநாடு கனடாவின் ஆல்பர்ட்டாவில் நேற்று (16) ஆரம்பமானது.

மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் கனடாவை வந்தடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கனேடிய பிரதமர் மார்க் கார்னி பதவியேற்ற மூன்று மாதங்களுக்குப் பின்னர் G7 உச்சி மாநாடு இடம்பெறுகின்றமை சிறப்பம்சமாகும்.

கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, மெக்சிகோ, உக்ரைன் மற்றும் இந்தியாவின் தலைவர்களும் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு, உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி, டிஜிட்டல் மாற்றம் மற்றும் காலநிலை நடவடிக்கை உள்ளிட்ட உலகம் தற்போது எதிர்கொள்ளும் உலகளாவிய பிரச்சினைகள் தொடர்பில் இந்த உச்சிமாநாடு கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...