பலஸ்தீன ஆதரவு செயற்பாட்டாளர்கள் RAF பிரைஸ் நார்டனுக்குள் நுழைந்து இராணுவ விமானங்களுக்கு சிவப்பு வண்ணம் தீட்டியதை அடுத்து, 2000 ஆம் ஆண்டு பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் பலஸ்தீனுக்கு ஆதரவாகச் செயற்படும் அமைப்புகளை பயங்கரவாத அமைப்பாக தடை செய்ய இங்கிலாந்து உள்துறை செயலாளர் யெவெட் கூப்பர் பிரேரணை முன்வைத்துள்ளார்.
இந்தப் பிரேரணை பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டால், பலஸ்தீனுக்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் அல்லது ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய கிரிமினல் குற்றமாக அது மாறும்.
பலஸ்தீன ஆதரவு செயற்பாட்டாளர்களின் செயல்பாடுகளை “அவமானகரமானது” என்று வர்ணித்த கூப்பர், அவை தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
2024 முதல் அவர்களின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும், இதனால் மில்லியன் கணக்கான பவுண்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் முதல் அமைச்சர் ஹம்சா யூசுப் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நதியா விட்டோம் ஆகியோர் இந்த நடவடிக்கையை ஒரு எல்லை மீறிய செயல் என்று விமர்சித்துள்ளனர்.
இந்தத் தடை மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.