ஒருங்கிணைந்த கிராம அபிவிருத்தி திட்டமிடல் அமர்வு புத்தளத்தில்..!

Date:

புத்தளம் பிரதேச செயலாளரின் அறிவுறுத்தலுக்கமைவாக, புதுக்குடியிருப்புக்கு தேவையான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கான மும்மொழிவுகளை சமர்ப்பிக்க, ஒரு கிராம அபிவிருத்தி திட்டமிடல் அமர்வு கடந்த புதன்கிழமை (25) புதுக்குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த அமர்வு, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் M.R.M இர்பான் (நளீமி), கிராம உத்தியோகத்தர் M.S. ரிஸ்மி மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்  ஷம்சுதீன் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

அமர்வுக்கு பிரதான வளவாளராக புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனூன் அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா உறுப்பினர் அஷ்ஷெய்க் ஷாபி (ஸஃதி), புத்தளம் மாநகர சபை கௌரவ உறுப்பினர்கள் சகோதரர் ரனீஸ் பதுர்தீன், சகோதரர் முர்ஷித், ஸாஹிரா தேசிய கல்லூரி அதிபர் ஐ.யு. நஜீம், ஸாஹிரா ஆரம்ப பாடசாலை அதிபர் S.R.M.M முஹ்சி, பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள், சமூக அமைப்புகள் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் என பலர் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது, எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து முன்னுரிமை அடிப்படையில் விவாதிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டன.

இதன் அடிப்படையில் உருவாக்கப்படும் உபக்குழுக்களின் மூலம் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...