நாட்டில் சில பகுதிகளில் அவ்வவ்போது மழை பெய்யக் கூடும்

Date:

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனுராதபுரம், மாத்தளை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்தின் சில இடங்களி்லும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

மத்திய மலைப் பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...