பலஸ்தீன விடுதலைப் போராட்டம் தொடர்பான மூன்று முக்கிய புத்தகங்கள் நாளை வெளியீடு

Date:

சிரேஷ்ட ஊடகவியலாளர் மகிந்த அத்தக எழுதிய ‘காசா இனப்படுகொலை’, முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பக்கீர் மார்க்கர் எழுதிய ‘பலஸ்தீன்’ மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் லத்தீஃப் பாரூக் எழுதிய ‘பாலஸ்தீனத்திற்கான கண்ணீர் இல்லை’ (‘NO TEARS FOR PALESTINE’) எனும் மூன்று முக்கியமான புத்தகங்கள் நாளை (01 ஜூலை) வெளியிடப்படவுள்ளன.

இந்நிகழ்வு, இலங்கை உலகளாவிய நீதிக்கான பத்திரிகையாளர்கள் (Sri Lanka Journalists for Global Justice) அமைப்பின் ஏற்பாட்டில், கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தின் லைட் ஹவுஸ் கேட்போர் கூடத்தில், மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணிஎம்.எம்.ஸுஹைர் (PC) மற்றும் ஊடகவியலாளர்களான ஷெர்லி கந்தப்பா, தரிந்து உடுவரகெதர ஆகியோர் புத்தகங்களின் மதிப்புரைகளை வழங்குவர்.

இந்த மூன்று நூல்களும், பலஸ்தீனத்தில் நடைபெறும் தாக்குதல்கள், இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் சாட்சிகளாக அமைந்துள்ளன.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...