டெங்குக்கான பொறுப்பை பாடசாலை அதிபர்களே ஏற்கவேண்டும்:கல்வியமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கைக்கு அதிபர்கள் சங்கம் எதிர்ப்பு

Date:

பாடசாலைகள் வளாகங்களில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் பதிவாகினால், அதற்கான பொறுப்பை பாடசாலைகளின் அதிபர்களே ஏற்கவேண்டுமென கல்வியமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு, அதிபர்கள் தர நிலை அதிகாரிகள் சங்கம்  எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

டெங்கு மற்றும் சிக்குன்குனியாவினால் பல பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக  சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனையடுத்தே, டெங்கு மற்றும் சிக்குன்குனியாவைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து மாகாணக் கல்வி பணிப்பாளர்களுக்கும் கல்வியமைச்சினால் அண்மையில் சுற்றறிக்கையொன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, சகல பாடசாலை வளாகங்களிலும் நுளம்பு பரவுவதைத் தடுக்கும் வகையிலான திட்டமொன்றை செயற்படுத்த வேண்டுமென கல்வியமைச்சு அதன்மூலம் பணிப்புரை விடுத்திருந்தது.

அத்துடன், டெங்கு மற்றும் சிக்குன்குனியா நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளம் காண்பதற்காக, கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும், பாடசாலை வளாகத்தில் அத்தகைய இடங்கள் அடையாளம் காணப்பட்டால், சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபர் தனிப்பட்ட முறையில் அதற்குப் பொறுப்பேற்கவேண்டுமெனவும் கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ள அதிபர் தரநிலை அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுங்கொடுவ, குறித்த சுற்றறிக்கையைத் தமது சங்கம் எதிர்ப்பதாகவும் அதிபர்களிடம் குறித்த பொறுப்புக்களை ஒப்படைத்துவிட்டு, உரிய தரப்பினர் விலகி இருப்பதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 25,505 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...