ஜனாதிபதி பொது மன்னிப்பு என்ற போர்வையில் கடந்த அரசாங்கங்களினாலும் பலர் முறைகேடாக விடுவிப்பு

Date:

கடந்த அரசாங்கங்களின் கீழ், பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு, விடுதலைக்கு அனுமதிக்கப்படாத கைதிகள் குழுவொன்று, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் முறைகேடாக விடுவிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஏற்கனவே விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த அரசாங்கங்களின்போது ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட கைதிகளின் பட்டியலை பெற்று விசேட பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கையை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இந்த ஆண்டு வெசாக் பண்டிகைக்காக விடுவிக்கப்பட்ட 388 கைதிகளில், அங்கீகரிக்கப்படாத கைதிகள் குழுவின் பெயர்கள் இரகசியமாக சேர்க்கப்பட்டிருப்பது தொடர்பான தகவல்கள் வெளியானதையடுத்து, இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

ஒவ்வொரு ஆண்டும், வெசாக் பண்டிகை மற்றும் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ், ஒவ்வொரு ஜனாதிபதியினாலும் குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்ட கைதிகளை விடுவிப்பது வழமை.

அபராதம் செலுத்துவதில் சிரமங்கள் காரணமாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகள், தண்டனைக் காலம் முடியும் தருவாயிலுள்ள கைதிகளே, இவ்வாறு விடுவிக்கப்படுகின்றனர்.

ஆனால், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட கைதிகளின் பட்டியலில் கடுமையான குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் பெயர்கள் திட்டமிட்டு உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சில காலமாக இரகசியமாக விடுவிக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்றும், நாடு முழுவதுமுள்ள சிறைச்சாலைகளில் இருந்து ஜனாதிபதி மன்னிப்புக்கு தகுதியற்ற 26 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக, குற்றப் புலனாய்வுத்துறை தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

 

சிறைச்சாலை அதிகாரிகள் சிலரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் செயல்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதேவேளை, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை பயன்படுத்தி சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட சந்தேகநபரான அநுராதபுரத்தைச் சேர்ந்த திலகரத்னவை கைதுசெய்ய பல புலனாய்வுக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உணர்ச்சி பொங்க முதலமைச்சராக பதவியேற்றார் த.வெ.க. தலைவர் விஜய்

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். தவெக தலைவர் விஜய்க்கு முதல்வராக...

முதல்வராக விஜய் பதவியேற்பு: சென்னையில் ராகுல் காந்தி!:

தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று(மே 10) பதவியேற்கவுள்ள நிலையில்,...

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...