போர் நிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் மீது தாக்குதல்? ஈரான் மறுப்பு

Date:

போர் நிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறும் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் 12 நாள்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று (24) அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீது கடைசியாக ஒரு தாக்குதலை மேற்கொண்ட பிறகு போர்நிறுத்தம் அறிவிப்பதாக ஈரான் தரப்பு கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

ஈரானில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும் சைரன் சத்தங்கள் கேட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.

போர் நிறுத்தத்தை மீறி ஈரான் தாக்குதல் நடத்தினால் தெஹ்ரான் அதிரும் என்று இஸ்ரேல் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் தாக்கினால் பதில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கான தகவல் எதுவும் இல்லை.

இந்நிலையில் இஸ்ரேல் இராணுவத்தின் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...